மொபைலில் 360டிகிரி கேமரா..! ஆண்ட்ராய்டு பிரம்மாவின் ’வாவ்’ முயற்சி

மொபைலில் 360டிகிரி கேமரா..! ஆண்ட்ராய்டு பிரம்மாவின் ’வாவ்’ முயற்சி

\'ஐபோன் லட்சியம்... ஆண்ட்ராய்டு நிச்சயம்!\' ஸ்மார்ட்போன் பற்றிய பெரும்பாலான இளைஞர்களின் கருத்து இதுவாகத்தான் இருக்கும். தரத்திலும், விலையிலும் ஐபோன் மற்றும் சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு இடைப்பட்ட மொபைலுக்கு மிகப்பெரிய சந்தை வெற்றிடமாக இருக்கிறது. இதை உணர்ந்து ஆண்டி ரூபின் (Andy Rubin) தலைமையிலான எஸ்சென்ஷியல் நிறுவனம் புதிதாக மொபைல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

\"ஆண்ட்ராய்டு

யார் இந்த ஆண்டி ரூபின் எனக்கேட்பவர்களுக்கு ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக். தற்போது, உலகின் முன்னணி ஆபரேட்டிங் சிஸ்டமாக விளங்கும் ஆண்ட்ராய்டை வடிவமைத்தவர் ரூபின் தான். \'ஆண்ட்ராய்டின் தந்தை\' என்ற செல்லப்பெயரும் இவருக்கு உண்டு. டிஜிட்டல் கேமராக்களுக்கான ஆபரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கும் முயற்சியில் தான் 2003 ஆம் ஆண்டு ஆண்ட்ராய்டு நிறுவனத்தை ரூபின் தொடங்கினார். ஆனால் டிஜிட்டல் கேமரா சந்தையைவிட மொபைல் சந்தை மிகப்பெரியது என்பதால், அதன்பின் தனது முடிவை ஆண்ட்ராய்டு நிறுவனம் மாற்றிக்கொண்டது. சிம்பியன் மற்றும் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டங்களுக்கு மாற்றாக ஆண்ட்ராய்டை உருவாக்கினார் ரூபின். இரண்டே ஆண்டுகளில் கூகுள், ஆண்ட்ராய்டு நிறுவனத்தை 50 மில்லியன் டாலர் கொடுத்து விலைக்கு வாங்கியது. அதன்பின் நடந்ததெல்லாம் வரலாறு!

கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த ஆண்டி ரூபின் 2014 ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறி, அதன்பின்னர் எஸ்சென்ஷியல் புராடக்ட்ஸ் என்ற பெயரில் புதிய நிறுவனத்தைத் தொடங்கினார். ஐபோன் மற்றும் சாம்சங் என்ற இரண்டு பெரிய ஜாம்பவான்களுக்கும் மாற்றாக ஒரு தயாரிப்பை வெளியிட வேண்டுமென்பதே ரூபினின் இலக்காக இருந்தது. ஐபோனின் தரத்தில் சாம்சங் ஸ்மார்ட்போனின் விலையில் மொபைல் ஒன்றை வெளியிடத் திட்டமிட்டு, அதற்கான வேலையைத் தொடங்கினார். \'Essential PH-1\' என்ற பெயரில் ஆண்ட்ராய்டில் இயங்கும் புதிய மொபைலை ரூபின் வெளியிட்டிருக்கிறார். ஆண்ட்ராய்டை உருவாக்கிய ரூபின் வெளியிட்டுள்ளதால், இந்த மொபைல் குறித்த எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது.

\"Essential

Snapdragon 835 வகை பிராசஸருடன் இந்த மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. குவால்காமின் இந்தப் புதிய பிராசஸர் இருப்பதால், ஸ்மார்ட்போன் மின்னல் வேகத்தில் செயல்படும். 4 GB RAM இருப்பதால் மொபைல் அவ்வளவு எளிதாக ஸ்ட்ரக் ஆகாது. 128 GB இன்டர்னல் மெமரி கொண்டிருப்பதால் ஸ்டோரேஜ் பற்றிய கவலையில்லை.

சாம்சங் எஸ் 8 மற்றும் எஸ் 8+ மாடல்களைப்போல, இதுவும் பேஸல் லெஸ் (Bezel-Less) ஸ்க்ரீனாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 5.7 இன்ச் கொண்ட இந்த ஸ்க்ரீனில், ஹோம் பட்டன் திரைக்கு உள்ளே இருக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்தைவிட ஸ்க்ரீனின் அளவு அதிகமாகப் பயன்பாட்டில் இருக்கும்.

செல்பி பிரியர்களுக்காக 8 மெகா பிக்ஸல் முன்பக்க கேமரா, 13 மெகா பிக்ஸல் கொண்ட இரண்டு பின்பக்க கேமராக்கள் இதில் இருக்கின்றன. இதனால் துல்லியமான தரத்தில் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும், 4K தரத்தில் வீடியோ எடுக்கக்கூடிய வகையில் இந்தக் கேமராக்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

மொபைலின் வெளிப்பகுதி அலுமினியத்துக்குப் பதிலாக, டைட்டானியத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது. டைட்டானியம் உறுதியான உலோகம் என்பதோடு, எளிதில் ஸ்க்ராட்ச் விழாது. மொபைல் பாதுகாப்புக்காகத் தனியாக கவர் வாங்க வேண்டியதில்லை என்கிறது எஸ்சென்ஷியல் நிறுவனம்.

\"360

மொபைலில் பயன்படுத்தக்கூடிய 360 டிகிரி கேமரா ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. மேக்னட் கனெக்டிங் பாய்ன்ட்டரோடு இதை எளிதில் அட்டாச் செய்துகொள்ளலாம். \'360 டிகிரி வீடியோ\' பயனாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதால், இந்தக் கேமரா 360 டிகிரி வீடியோ வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது டெக் உலகத்தின் எதிர்பார்ப்பு.

வயர்லெஸ் என்பதையே இந்த மொபைலின் முக்கியமான சிறப்பம்சம். மொபைலின் பின்புறம் இரண்டு மேக்னட் கனெக்ட்டிங் பாய்ன்ட்டர்கள் இருக்கின்றன. இதன் வழியாக வயர்லெஸ் சார்ஜிங் மூலம் மொபைல் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளலாம். ஃபிங்கர் பிரின்ட் சென்சார் பின்புறம் அமைக்கப்பட்டிருக்கிறது. 3040 mAh திறன் கொண்ட பேட்டரியும் இணைக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி S8, ஐபோன் 7 ப்ளஸ் போன்ற மாடல்களுக்கு இணையான தரத்துடன் வெளியாகியுள்ள இந்த மொபைலின் விலை இந்திய மதிப்பில் சுமார் 45,000 ரூபாய். 360 டிகிரி கேமராவுடன் சேர்த்து சுமார் 48,000 ரூபாய் விலைக்குக் கிடைக்கும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.