டேட்சன் கோ கோல்டு எடிஷன் இந்தியாவில் வெளியானது

டேட்சன் கோ கோல்டு எடிஷன் இந்தியாவில் வெளியானது

இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு டேட்சன் புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலினை அறிமுகம் செய்துள்ளது. டேட்சன் ரெடி-கோ கோல்டு எடிஷன் விலை இந்தியாவில் ரூ.3.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

புதிய கோல்டு எடிஷன் 1.0 லிட்டர் இன்ஜின் கொண்டுள்ளது. சிலவர், கிரே மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கும் டேட்சன் ரெடி-கோ பொனேட் மற்றும் பக்கவாட்டில் அழகிய வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. கோல்டு எடிஷன் என்பதால் கார் முழுக்க கோல்டு நிற ஸ்பிளாஷ் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதன் வீல் கவர், முன்பக்க கிரில் உள்ளிட்டவை கோல்டு நிற அக்சென்ட் பெற்றுள்ளது. இதுதவிர ரெடி-கோ மாடலில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், புதிய மியூசிக் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. வெளிப்புறம் மட்டுமின்றி உள்புற வடிவமைப்புகளிலும் கோல்டு நிறம் பூசப்பட்டுள்ளது.

\"\"

ரெடி-கோ கோல்டு எடிஷன் மாடலில் 1.0 லிட்டர் iSAT இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 64 bhp மற்றும் 91 Nm செயல்திறன் கொண்டுள்ளது. 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கபக்பட்டுள்ளதால் லிட்டருக்கு 22.5 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெனால்ட் குவிட் 1.0 லிட்டர் மாடல் லிட்டருக்கு 22.04 வரை செல்லும்.

ஒட்டுமொத்தமாக ரெடி-கோ கோல்டு எடிஷன் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் பண்டிகை கால விற்பனைக்கு ஏற்றதாகவும், அந்நிறுவன விற்பனையை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ரெடி-கோ கோல்டு எடிஷன் வாங்கும் வாடிக்கையாளர்கள் டேட்சன் கேர் எனும் சர்வீஸ் திட்டத்தை தேர்வு செய்ய முடியும். இதில் ஒட்டுமொத்த கார் சர்வீஸ் மொத்தமாக மூன்று, நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு பெற முடியும். இதன் மூலம் அவ்வப்போது ஏற்படும் கோளாறுகளுக்கான கட்டணத்தை சேமிக்க முடியும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.