மத்திய அரசின் பாதுகாப்பான இந்தியா திட்டத்திற்கு சாம்சங் ஆதரவு

மத்திய அரசின் பாதுகாப்பான இந்தியா திட்டத்திற்கு சாம்சங் ஆதரவு

சர்வதேச அளவில் சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இத்துடன் உலகில் செல்ஃபி எடுக்கும் போது உயிரிழப்போர் எண்ணிக்கையில் 50 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இதைத் தொடர்ந்து சாலைகளை பயணிக்கும் போது மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பாதுகாப்பான இந்தியா (Safe India) எனும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் விழிப்புணரவு திட்டத்திற்கு சாம்சங் இந்தியா வரவேற்றிருப்பதோடு இந்த திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது. 

முன்னதாக சாம்சங் எஸ் பைக் மோட், கார் மோட், வாக் மோட் உள்ளிட்டவை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பொது மக்கள் சாலையில் செல்லும் போது பாதுகாப்பாக மொபைல் போன் பயன்படுத்துவதை உறுதி செய்யும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலிகள் பெங்களூரு மற்றும் நொய்டாவில் அமைந்துள்ள சாம்சங் ஆய்வு மற்றும் கட்டமைப்பு மையங்களில் உருவாக்கப்பட்டது. 

Ads by ZINC
 
 
 


மத்திய அரசின் சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சாம்சங் உருவாக்கியுள்ள விழிப்புணர்வு வீடியோவில் பொது மக்கள் சாலைகளை கடக்கும் போது அதிக பொறுப்புடன் மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு தகவல் இடம்பெற்றுள்ளது. 

பொது மக்கள் தங்களது மொபைல் போன்களை மிகவும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்ற தகவலை எடுத்துரைக்கும் புகைப்படங்கள் மற்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் வேண்டுகோள் உள்ளிட்டவை ஏ.ஆர். ரஹ்மான் பின்னணி இசையில் 35 விநாடிகள் ஓடும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

 
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.