மேட் ரெட் அபாச்சி RTR 160, RTR 180 மாடல்கள் இந்தியாவில் வெளியாகியுள்ளது

மேட் ரெட் அபாச்சி RTR 160, RTR 180 மாடல்கள் இந்தியாவில் வெளியாகியுள்ளது

டி.வி.எஸ். மோட்டார் கம்பெணி நிறுவனத்தின் அபாச்சி RTR 160 மற்றும் RTR 180 மேட் ரெட் மாடல்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 

புதிய அபாச்சி RTR 160 மேட் ரெட் மாடலின் விலை ரூ.77,865 மற்றும் அபாச்சி RTR 160 RD ரியர் டிஸ்க் மாடல் ரூ.80,194 மற்றும் அபாச்சி RTR 180 மேட் ரெட் ரூ.81,833 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) ஆகும்.

புதிய அபாச்சி RTR 160 மற்றும் RTR 180 மாடல்கள் முழுமையான மேட் ஃபினிஷ் செய்யப்பட்டது. ஏற்கனவே மேட் ரெட் நிறம் அபாச்சி RTR 200 4V மாடலில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் RTR 160 மாடலில் சிவப்பு நிற ரிம் ஸ்டிக்கர் மற்றும் RTR 180 மாடலில் வெள்ளை நிற ஸ்டிக்கர் வழங்கப்பட்டுள்ளது.  

அபாச்சி RTR 180 ABS மாடலில் புதிய மேட் ரெட் நிறம் வெளியிடப்படவி்ல்லை. மேலும் காஸ்மெடிக் மாற்றங்களை தவிர புதிய அபாச்சியில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

\"\"

அபாச்சி RTR 160 மாடலில் 159.7 சிசி ஒற்றை சிலிண்டர் இன்ஜின் 15.2bhp மற்றும் 13.1Nm செயல்திறன் கொண்டுள்ளது. அபாச்சி RTR 180 மாடலில் 177.4 சிசி ஒற்றை சிலிண்டர் இன்ஜின் 17.03bhp மற்றும் 15.5Nm செயல்திறன் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

இரண்டு மாடல்களிலும் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறம் ட்வின் இன்வெர்ட்டெட் கேஸ் ஃபில்லிங் MIG ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 270 மில்லிமீட்டர் பெடல் டிஸ்க் மற்றும் பின்புறம் 200 மில்லிமீட்டர் பெடல் டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் புதிய மேட் ரெட் எடிஷன் அபாச்சி மாடல்கள் பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளுத. மேலும் வரும் மாதங்களில் டி.வி.எஸ். நிறுவனத்தின் முதல் ஃபுல்லி ஃபேர்டு மோட்டார்சைக்கிள் மாடலான RR310S வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.