ஜூன் 12... வருகிறது ட்ரையம்ப் சூப்பர் பைக்!

ஜூன் 12... வருகிறது ட்ரையம்ப் சூப்பர் பைக்!

உலகளவில் பைக் ஆர்வலர்களின் பரவலான லைக்குகளைப் (10 ஆண்டுகளில், 50 ஆயிரத்துக்கும் அதிகமான விற்பனை எண்ணிக்கை) பெற்றிருக்கும் ஸ்ட்ரீட் ட்ரிபிள் பைக்கின் 2017 எடிஷனை, வருகின்ற ஜூன் 12 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது ட்ரையம்ப்.
 
 
\"\"
 
 
S, R, RS எனும் 3 வேரியன்ட்களில் உலக சந்தைகளில் கிடைக்கும் இந்த சூப்பர் பைக்கின் ஆரம்ப S வேரியன்ட், உத்தேசமாக 8 - 9 லட்ச ரூபாய்க்கு முதலில் விற்பனைக்கு வருகிறது. புக்கிங்கும் (1-2 லட்சம் முன்பணம்) ஆரம்பமாகிவிட்டது; மற்ற வேரியன்ட்கள், இந்த வருடத்தின் இறுதிக்குள் களமிறங்கும் எனத் தெரிகிறது.
 
 
\"\"
 
 
ஆனால் மூன்று வேரியன்ட்களிலுமே இருப்பது, முற்றிலும் புதிய 765சிசி, 3 சிலிண்டர், DOHC, லிக்விட் கூல்ட் இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் செட்-அப்தான்! S வேரியன்ட்டில் இது 111bhp@11,250rpm பவரையும், 7.3kgm@9,100rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.
 
 
\"\"
 
 
மேலும் ஸ்லிப்பர் கிளட்ச், ரைடு பை வயர், ஏபிஎஸ், ட்ராக்‌ஷன் கன்ட்ரோல், 2 ரைடிங் மோடுகள், அட்ஜஸ்டபிள் ஃUSD போர்க் - மோனோஷாக் சஸ்பென்ஷன், 2 கிலோ குறைவான எடை & முன்னேற்றப்பட்ட ஃபினிஷ் என முன்பைவிட மாடர்ன் பேக்கேஜாக வருகிறது ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் S. Diablo Red, Phantom Black ஆகிய 2 நிறங்களில் வெளிவரும் ஸ்ட்ரீட் ட்ரிபிள் பைக்கில், புகழ்பெற்ற பைரலி டயர்கள் இருப்பது ப்ளஸ்! 
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.