16 எம்பி செல்ஃபி கேமரா கொண்ட விவோ Y69 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

16 எம்பி செல்ஃபி கேமரா கொண்ட விவோ Y69 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. Y69 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனின் விற்பனை செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமேசான், ப்ளிப்கார்ட் மட்டுமின்றி ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
16 எம்பி சாம்சங் S5K3P3ST செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர், மூன்லைட் க்ளோ, மற்றும் புகைப்படங்களை அழககாக்கும் க்ரூப் செல்ஃபி, லைவ் போட்டோ அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
 
 
\"\"
 
விவோ Y69 சிறப்பம்சங்கள்:
 
 
- 5.5 இன்ச் எச்டி 720x1280 பிக்சல் IPS டிஸ்ப்ளே
- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்
- 16 எம்பி செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 3.2
- கைரேகை ஸ்கேனர்
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3000 எம்ஏஎச் பேட்டரி
 

 

இந்தியாவில் ஷேம்பெயின் கோல்டு, மேட் பிளாக் நிறங்களில் கிடைக்கும் விவோ Y69 ஸ்மார்ட்போன் விலை ரூ.14,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய விவோ ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய ஸ்மார்ட்போனிலும் கேமராவிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.