2016-ல் அறிமுகமான பைக்ஸ் - ஒரு சிறப்புப் பார்வை!

2016-ல் அறிமுகமான பைக்ஸ் - ஒரு சிறப்புப் பார்வை!

கடந்த ஆண்டில்தான் சில தனித்தன்மையான, சுவாரஸ்யமான தயாரிப்புகள் இந்தியாவில் அறிமுகமாயின என்றால் அது மிகையில்லை. அட்வென்ச்சர் டூரரான ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், ரெட்ரோ டிஸைனைக் கொண்டிருக்கும் பஜாஜ் V15 என பைக் செக்மென்ட்டில் ஆச்சரியங்களுக்குப் பஞ்சமில்லை. ஆக 2016-ல், இந்தியா பெற்ற முக்கியமான டூ-வீலர்களையும், அதன் மினி ரெவ்யுவையும் பார்ப்போமா? 
 
டிவிஎஸ் விக்டர்
 
\"\"
 
\'\'படங்களில்தான் இரண்டாம் பாகம் வரவேண்டுமா? நாங்கள் பைக்கிலும் இரண்டாம் பாகம் கொண்டு வருவோம்\'\' என டிவிஎஸ் களமிறக்கியதுதான் விக்டர். பெயர் மட்டும்தான் ஒன்றே தவிர, பழைய பைக்குக்கும் இதற்கும் துளிகூட ஒற்றுமை இல்லை. மாடர்ன் டிஸைனில் தரமாக இருக்கிறது புதிய விக்டர். 60வாட் ஹெட்லைட், Hazard Lamp, டேக்கோமீட்டர், எக்கோ-பவர் ரைடிங் இண்டிகேட்டர், 3 வால்வு இன்ஜின், சிரீஸ் ஸ்பிரிங் சஸ்பென்ஷன், பெட்டல் டிஸ்க் பிரேக் என விலை அதிகமான பைக்குகளில் காணப்படும் வசதிகளை, 110சிசி கம்யூட்டர் பைக்கான விக்டரில் வழங்கியிருந்தது டிவிஎஸ்.
 
லேட்டஸ்ட் தொழில்நுட்பம் காரணமாக, ஸ்மூத்தான 109.7சிசி இன்ஜினின் ஆரம்ப கட்ட & மித வேக பெர்ஃபாமென்ஸ் சிறப்பாகவே இருந்தது. சேஸி, சஸ்பென்ஷன், பிரேக்ஸ் ஆகியவை கம்யூட்டர் பைக்குகளில் வழக்கமாக இருப்பவையே என்றாலும். டிவிஎஸ் அவற்றை டியூன் செய்த விதம் கச்சிதம். ஒரு 125சிசி பைக்கிற்கான குணாதிசியங்களுடன் கூடிய 110சிசி பைக் வேண்டும் என்றால், தாராளமாக விக்டருக்கு லைக் போடலாம்!
 
 
டிவிஎஸ் அப்பாச்சி
 
\"\"
 
பஜாஜுக்கு பல்ஸர் எப்படியோ, டிவிஎஸ்ஸுக்கு அப்பாச்சி அப்படி; அசரடிக்கும் டிஸைன், அசத்தலான பெர்ஃபாமென்ஸ், அற்புதமான ஹேண்ட்லிங் என என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக்குக்குத் தேவையான அம்சங்கள் அனைத்தையும் சரியான மிக்ஸிங்கில் அப்பாச்சி சிரீஸ் கொண்டிருந்தன. பஜாஜ்/கேடிஎம் நிறுவனத்தின் 200சிசி பைக்குகளுக்குச் சவால் அளிக்கும் விதமாக, டிவிஎஸ் அறிமுகப்படுத்திய பைக்தான் அப்பாச்சி RTR 200 4V. டுகாட்டியின் நேக்கட் ஸ்ட்ரீட் பைக்குகளை நினைவுபடுத்தும்படி அட்டகாசமாகக் காட்சியளிக்கும் இந்த பைக், டிவிஎஸ் தயாரிப்பிலே சிறந்த ஃபினிஷ் மற்றும் கட்டுமானத் தரத்தைக் கொண்டிருக்கிறது. பழைய அப்பாச்சியுடன் ஒப்பிடும்போது டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், ஸ்டைலான அலாய் வீல் டிஸைன், இரட்டைக் குழல் துப்பாக்கியைப் போன்ற எக்ஸாஸ்ட் பைப் போன்ற பல வசதிகள் புதிதாக இடம்பிடித்திருந்தன.
 
4 வால்வு - ஆயில் கூலர் - பேலன்ஸர் ஷாஃப்ட்டைக் கொண்டுள்ள 197.8சிசி இன்ஜின், அதிர்வுகளற்ற பெர்ஃபாமென்ஸை வாரி வழங்குகிறது; எக்ஸாஸ்ட் சத்தமும் வாவ் ரகம். அப்பாச்சி RTR 200 4V பைக்கின் சேஸி, மற்ற அப்பாச்சிகளைப் போலவே Dual Cradle தான். ஆனால் டிவிஎஸ் பைக்கிலே முதன்முறையாக, தடிமனான KYB முன்பக்க ஃபோர்க் மற்றும் பின்பக்க KYB மோனோஷாக் சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் ஆப்ஷனலாகக் கிடைக்கும் பைரலி டயர்கள் சேரும்போது, அப்பாச்சியைக் கையாள்வது நல்ல அனுபவமாக இருந்தது. கார்புரேட்டர்/EFi, பெட்டல் டிஸ்க் பிரேக்/ABS, Remora/ பைரலி டியுப்லெஸ் டயர் எனப் பல ஆப்ஷன்கள் இருப்பதால், அப்பாச்சி RTR 200 4V பைக்கை வாங்குபவர் தனது பட்ஜெட்டுக்கு ஏற்ப தேவையானதை வாங்க முடியும் என்பது பெரிய ப்ளஸ்!
 
 
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்
 
\"\"
 
காலத்தால் அழியாத ரெட்ரோ டிஸைனுடன் கூடிய டூரிங் பைக்குகளைத் தயாரிப்பதில் புகழ்பெற்ற ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திடமிருந்து, ஹிமாலயன் போன்ற அட்வென்ச்சர் பைக்கைப் பலர் எதிர்பார்க்கவில்லை. கரடுமுரடான டிஸைன் என்றாலும், டிராவலுக்குத் தேவையான பொருட்களை வைக்குமளவிற்கு பைக் பிராக்டிக்கலாக இருக்கிறது. அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட் ஸ்கிரினுக்குப் பின்னே, காம்பஸ் உடனான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் தெளிவாக இருக்கிறது. மற்ற ராயல் என்ஃபீல்டு பைக்குகளைவிட ஹிமாலயனின் ஃபினிஷ் & கட்டுமானத் தரத்தில் முன்னேற்றம் தெரிகிறது.
 
ஆயில் கூலர் உடனான புதிய 411சிசி இன்ஜின், தனித்துவமான சத்தத்துடன் அதிக டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இது பைக்கில் ஆஃப் ரோடிங் செல்லும்போது உதவிகரமாக இருக்கிறது. ஆனால் 110கிமீக்கும் அதிகமான வேகத்தில் நெடுஞ்சாலைகளில் க்ரூஸ் செய்வதற்கான பவர் இல்லாதது மைனஸ். சேஸி, சஸ்பென்ஷன், பிரேக்ஸ் ஆகியவை வழக்கமான விஷயங்களாக இருந்தாலும், அட்வென்ச்சர் பைக்குக்கு ஏற்ப அவற்றை ரீ-டியூன் செய்துள்ளது ராயல் என்ஃபீல்டு. எனவே ஆஃப் ரோடிலும், ஆன் ரோடிலும் பைக்  இந்தியாவில் தற்போது கிடைக்கக்கூடிய ஒரே பட்ஜெட் அட்வென்ச்சர் டூரர் என்ற முறையில், ஹிமாலயனுக்கு உண்மையான போட்டியாளர் இல்லை!
 
 
யுஎம் ரெனிகாடே கமாண்டோ & ஸ்போர்ட் S
 
\"\"
 
கடந்த 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்ட யுஎம் நிறுவனத்தின் கமாண்டோ, ஸ்போர்ட் S பைக்குகள், பலத்த வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த க்ரூஸர் பைக்குகளை விற்பனைக்கு கொண்டுவந்த யுஎம், விலை விஷயத்தில் பைக் ஆர்வலர்களைக் கவர்ந்துவிட்டது. இவற்றில் கமாண்டோ பைக், உயரமான ஹேண்டில்பார், ஸ்போக் வீல், மிலிட்டரி பைக்கில் காணப்படும் பச்சை நிறம், பெரிய ஃபெண்டர்களுடன், பார்ப்பதற்கு ஹார்லி டேவிட்சன் பைக்குகளைப் போல இருக்கிறது. சிறிய ஃபெண்டர், அலாய் வீல், டூயல் டோன் கலர், LED ஸ்ட்ரிப், Drag பைக்கில் இருப்பதுபோன்ற ஹேண்டில்பாரைக் கொண்டிருக்கும் ஸ்போர்ட் S, அசப்பில் சுஸூகியின் இன்ட்ருடர் பைக்கை நினைவுபடுத்துகிறது.
 
பிளாஸ்டிக் பாகங்களின் தரம் மற்றும் ஃபினிஷ் செய்யப்பட்ட விதம், மிகவும் சீப்பாக இருப்பது நெருடல். இந்த இரண்டு பைக்கிலும் இருப்பது, லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர், 279.5சிசி கார்புரேட்டட் இன்ஜின்தான். இது போதுமான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தினாலும், இன்ஜின் டியூன் செய்யப்பட்ட விதம், க்ரூஸர் பைக்குக்கு ஏற்புடையதாக இல்லை. டெக்னிக்கலாக ஒரு பட்ஜெட் க்ரூஸர் பைக்கில் என்னென்ன இருக்குமோ, அவை இங்கும் தொடர்கின்றன. ஆனால் ஓட்டுதல் அனுபவமும் திருப்திகரமாகவே இருக்கிறது. பைக்கின் டிஸைனில் யுஎம் காட்டிய அக்கறையை தரத்தில் காட்டியிருந்தால், இது அவென்ஜர் மற்றும் புல்லட் பைக்குகளுக்குச் சரியான மாற்றாக இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது.
 
 
பஜாஜ் V15
 
\"\"
 
\'\'இந்தியாவின் விமானதாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தின் இரும்பைக் கொண்ட பைக்\'\' - பஜாஜ் V15 பைக்கை அறிமுகப்படுத்த வேறென்ன சொல்ல வேண்டும்? பைக் பாதி, க்ரூஸர் மிதி என வித்தியாசமான டிஸைனைக் கொண்ட இந்த பைக்கின் பின் சீட்டை முடும் வகையில், ஸ்மார்ட்டான கவுல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதை வைத்துக் கொண்டால், ஸ்டைலான சிங்கிள் சீட் பைக் போன்ற தோற்றம் கிடைப்பதுடன், லிஃப்ட் கேட்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பிக்கவும் உதவும். V15 பைக்கில் இருக்கும் 149.5 சிசி, DTS-i இன்ஜின், கம்யூட்டர் பைக்கின் அத்தியாவசிய தேவையான அதிக டார்க்கை வெளிப்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
எனவே எந்த கியரில் சென்றாலும், பைக்கின் ஆக்ஸிலரேட்டரை அதிகரிக்கும் போது, தேவையான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுகிறது. இதை நம்பி இன்ஜினை விரட்டி ஓட்ட முற்பட்டால், அதிக வேகம் செல்வதற்கான பவர் இல்லாமல் தத்தளிக்கிறது V15. இந்த பைக்கின் டிஸைன் வித்தியாசமாக இருந்தாலும், இதன் டெக்னிக்கல் விபரங்களில் அப்படிப்பட்ட அம்சங்கள் ஏதும் இல்லை. என்றாலும், சீட்டிங் பொசிஷன் - சஸ்பென்ஷன் செட்-அப் செய்யப்பட்ட விதத்தினால், ஓட்டுதல் அனுபவம் சொகுசாகவே இருக்கிறது. 150சிசி செக்மென்ட்டில் இருக்கும் பைக்குகள் அனைத்தையும்விட குறைவான விலையைக் கொண்டிருக்கும் V15, ஸ்டைலான கம்யூட்டர் பைக் வேண்டும் என்பவர்களை தன்வசம் ஈர்க்கக்கூடிய பேக்கேஜாக இருக்கிறது.
 
 ஹீரோ ஸ்ப்ளெண்டர் 110 ஐ-ஸ்மார்ட்
 
\"\"
 
செல்ஃப் ஸ்டார்ட், டிஸ்க் பிரேக், ட்ரிப் மீட்டர், அலாய் வீல் என எந்த வசதிகளும் இல்லாத காலத்திலேயே, டாப்-10 பைக் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை ஸ்ப்ளெண்டர் பிடித்ததற்குக் காரணம் அதன் இன்ஜின்தான். eபோனால் போகட்டும்・என்று காலப்போக்கில் ஸ்ப்ளெண்டர் பைக்கில் சில வசதிகளைச் சேர்த்ததோடு, 100 சிசியில் முதன்முறையாக ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டத்துடன் கூடிய ஐ-ஸ்மார்ட் பைக்கையும் களமிறக்கியது ஹீரோ. இப்போது 110 சிசியில் அதே தொழில்நுட்பத்தோடு, \'ஆல் நியூ ஐ-ஸ்மார்ட் 110\' எனும் புதிய பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது ஹீரோ. மேலோட்டமாகப் பார்த்தால், பழைய ஐ-ஸ்மார்ட் மாதிரிதான் இருக்கு・என்று நினைக்கத் தோன்றும்.
 
கொஞ்சம் கூர்ந்து பார்த்தால், டிஸைனில் கொஞ்சம் மெச்சூரிட்டி தெரிகிறது. டூயல் டோன் கலர் ஆப்ஷன்கள், ஆபீஸ் டியூட்டி பார்க்கும் இளைஞர்களுக்குக்கூடப் பிடிக்கும்படி இருக்கிறது. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் - இந்த பைக்குக்கு ஹெட்லைட் ஸ்விட்ச் கிடையாது. பைக்கை நீங்கள் ஸ்டார்ட் செய்யும்போது, தானாகவே ஹெட்லைட்டும் ஒளிர ஆரம்பிக்கிறது.  சாதாரண ஓடோ மீட்டர், ஸ்பீடோ மீட்டரையும் பார்த்துப் பார்த்துப் பழகிப் போன கம்யூட்டர்களுக்கு, ஐ-ஸ்மார்ட்டின் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஸ்பெஷல் ரகம். ஹீரோவுக்கு முதலில் ஒரு லைக்! இதுவரை இன்ஜின் விஷயத்தில் ஹோண்டாவையே நம்பி வந்த ஹீரோ, முதன்முதலாக ஒரு 110 சிசி இன்ஜினை, ஃப்ரிக்ஷன் பஸ்ட்டிங் தொழில்நுட்பத்தில் சொந்தமாகத் தயாரித்திருக்கிறது.
 
மேலும் இது BS-IV எமிஷன் நார்ம்களிலும் அப்டேட்டட் ஆக இருப்பது பெரிய ப்ளஸ். மூன்றாவது கியரில், சுமார் 35 கி.மீ வேகத்தில் செல்லும்போது, ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிவிட்டு, அதே கியரில் திணறாமல் சட்டென ・டேக் ஆஃப்・ஆகும்படி இன்ஜினைச் சிறப்பாக டியூன் செய்துள்ளது ஹீரோ. பைக்கின் குறைவான எடை, எடை குறைந்த, உயரம் குறைந்த மக்கள் கையாளுவதற்கு ஏற்றதாக இருக்கிறது. ஆனால், அதிக வேகங்களில், இதுவே கொஞ்சம் ஆபத்தாக மாறிவிடுகிறது. மேலும் அதிக வேகத்தில் செல்லும்போது, டிஸ்க் பிரேக்ஸ் இருந்திருந்தால், இன்னும் கொஞ்சம் நம்பிக்கையாகப் பயணிக்கலாம். ஐ-ஸ்மார்ட் 100சிசி பைக்கின் விலையைவிடக் கொஞ்சூண்டு அதிக விலைக்கு, கூடுதல் சிசி & வசதிகளுடன் கிடைக்கும் ஐ-ஸ்மார்ட் 110 நல்ல சாய்ஸ்தான்!
 
ஹீரோ அச்சீவர் 150
 
\"\"
 
\'\'முற்றிலும் புதிய பைக்\'\' என்று இந்த அச்சீவரைச் சொல்ல முடியாது; ஆனால் ・புதிய அச்சீவர்・என்று இந்த பைக்கை நிச்சயமாகச் சொல்லலாம். ஏனெனில் கம்யூட்டர்களுக்கு அச்சீவர் 10 ஆண்டுகளாகப் பரிச்சயம். ஸ்மூத்தான இன்ஜின், கையைக் கடிக்காத விலை என்று பட்ஜெட்டோடு பெர்ஃபாமென்ஸை எதிர்பார்த்தவர்களுக்கு இது நல்ல பைக்காக இருந்தாலும், பல்ஸர், FZ, யூனிகார்ன், அப்பாச்சி போன்ற ஸ்டைல் பைக்குகளின் வரவால், விற்பனையில் பெரிதாக அச்சீவ் செய்யவில்லை பழைய அச்சீவர். இப்போது, 挿கத்திச்சண்டை・வடிவேலு போல ・ஐ・யம் பேக்・என்று திரும்பவந்திருக்கிறது அச்சீவர் 150. சுருக்கமாகச் சொல்வதென்றால், பந்தாவாக இல்லாமல் எளிமையாகவே இருக்கிறது புதிய அச்சீவரின் டிஸைன்.
 
\'ஸ்பீடோ, டேக்கோ, ஃப்யூல் மீட்டர்களுக்கு அனலாக்கே போதும்・என்று ஹீரோ நினைத்துவிட்டதோ என்னவோ, பெயருக்குக்கூட டிஜிட்டல் இல்லை. கம்யூட்டர்கள் ஸ்டைலை எதிர்பார்க்காமல் இருக்கலாம்; ஆனால் வசதிகளை எதிர்பார்க்கத்தானே செய்வார்கள்? அட்லீஸ்ட் ட்ரிப் மீட்டர், சைடு ஸ்டாண்டு இண்டிகேட்டர் போன்றவற்றை கொடுத்ததற்காவது ஹீரோவுக்கு ஒரு லைக் போடலாம்! புதிய அச்சீவரில் இருப்பது, அதே 150சிசி இன்ஜின்தான் என்றாலும், ஹீரோவின் ஃபேவரைட்டான i3 ஸ்மார்ட் ஸ்டார்ட்-ஸ்டாப் & ஆல்டைம் ஹெட்லைட் சிஸ்டத்துடன் வந்திருக்கும் முதல் 150சிசி பைக் இதுதான். ஆனால் பழைய அச்சீவரில் இருந்து பவர், டார்க் எதுவும் மாறவில்லை.
 
இன்ஜின் டியூனிங் காரணமாக, லோ ஸ்பீடில் ஹை கியரில்கூட எந்தவித முக்கல் முனகல் இல்லாமல், டிராஃபிக்கில் விருட்டெனக் கிளம்ப முடிகிறது. பைக்கின் எடை சற்று அதிகமாக என்றாலும், ஈஸியாக வளைத்துத் திருப்புவதற்கான நம்பிக்கை கிடைக்கிறது. கூடுதல் மைலேஜிற்காக ஒல்லியான டயர்களை அச்சீவரில் பொருத்தியுள்ளது ஹீரோ. எனவே சட்டென பிரேக் பிடிக்கும்போது கவனமாக இருப்பது நல்லது. மின்னல் வேகத்தில் பறக்கும் இளைஞர்களை மனதில் வைத்துத் தயாரிக்கப்படவில்லை அச்சீவர். ・00 சிசி மாதிரி திணறவும் கூடாது; 125 சிசி மாதிரி மைலேஜும் தரணும்; 150 சிசி பெர்ஃபாமென்ஸும் இருக்கணும்; விலையும் கம்மியா இருக்கணும்・என்று கேட்கும் மிடில் கிளாஸ் மாதவன்கள், அச்சீவரைத் தாராளமாக டிக் செய்யலாம்!  
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.