30 வயதை கடந்த பெண்கள் அழகை பராமரிக்க வழிமுறைகள்

30 வயதை கடந்த பெண்கள் அழகை பராமரிக்க வழிமுறைகள்

30 வயதை கடந்த பெண்கள் சரும பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் சருமம் பொலிவிழந்து முதுமையான தோற்றம் எட்டிப்பார்க்க வழிவகுத்துவிடும். அழகை மெருகேற்ற ‘மேக்கப்’புக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டும் போதாது. வாழ்வியல் முறைகளையும் அதற்கு தகுந்தபடி மாற்றிக்கொள்ள வேண்டும்.

* உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருந்தால்தான் சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும். உடல் ஆரோக்கிய குறைபாடு ஏற்பட்டாலோ, மன அமைதியின்றி இருந்தாலோ அதன் தாக்கம் சருமத்திலும் பிரதிபலிக்கும். உடல் நலம் சிறக்க தினமும் போதுமான உடலுழைப்பை கொடுக்க வேண்டும். தினமும் நன்றாக தூங்கி எழுவது, சத்தான உணவுவகைகளை சாப்பிடுவது, வழக்கமான உடல் இயக்க பயிற்சிகளை மேற்கொள்வது இளமை தோற்றத்தையும், சரும அழகையும் தக்க வைக்க வழிவகை செய்யும்.

* சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்வது மிக முக்கியமானது. ஈரப்பதத்தை தக்க வைக்கும் கிரீம்கள், லோஷன்களையும் பயன்படுத்தி வரலாம். தேன் மற்றும் பாலை பயன்படுத்தியும் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கலாம்.

* உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படுவதும் சரும பொலிவுக்கு பங்கம் விளைவிக்கும். தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அது சுருக்கங்கள் போன்ற வயதான அறிகுறிகள் தோன்றுவதை தடுக்கும்.

\"\"

* சருமம் வயதான தோற்றத்திற்கு மாறுவதற்கு புற ஊதா கதிர்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றும் அதனை உறுதிபடுத்தியுள்ளது. ஆகையால் சூரிய கதிர்வீச்சின் ஆதிக்கத்தில் இருந்து சருமத்தை காக்கும் கிரீம்களை பயன்படுத்தி வருவது நல்லது.

* அழகுக்கும், இளமைக்கும், மகிழ்ச்சியான மனநிலை மிக அவசியம். மன அழுத்தமும், கவலையும் விரைவாகவே வயதான தோற்றத்திற்கு வழிவகுத்துவிடும். குறிப்பாக மன அழுத்தம் உடையவர்களுக்கு விரைவாகவே தோல் சுருக்கங் கள் ஏற்படும். மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பது மன அழுத்தத்தை விரட்டுவதோடு இளமையை தக்கவைக்கவும் துணைபுரியும்.

* புகைப் பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களும் விரைவில் வயதான தோற்றத்தை உருவாக்கும். தொடர்ந்து மது அருந்தும்போது அதில் இருக்கும் ஆல்ஹகால், தோலில் இருக்கும் நெகிழ்ச்சி தன்மையை இழக்க செய்து உலர்வடைய செய்துவிடும். புகைப்பிடிக்கும் பழக் கத்தை தொடர்வதன் மூலம் பற்கள் மஞ்சள் நிறமாவது, தலைமுடி நிறம் மாறுவது போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

* கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, நொறுக்கு தீனிகளை சுவைப்பது போன்ற உணவு வழக்கமும் அழகான சருமத்திற்கு பங்கம் விளைவிக்கும்.

* சோம்பேறித்தனமும் விரைவில் உடல் தளர்ச்சியை ஏற்படுத்தி முதுமை தோற்றத்திற்கு அழைத்து சென்றுவிடும். சுறுசுறுப்புடன் செயல்படுவதோடு உடற்பயிற்சிகளையும் செய்து வர வேண்டும். நேராக நின்று, உட்கார்ந்து செய்யும் உடற் பயிற்சிகள் முதுகெலும்புக்கு வலு சேர்க்கும். 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.