40 கி.மீ. வேகத்தில் உடைந்த அலாய் வீல்கள்: வாரண்டியில் சரி செய்ய மறுத்த பிரபல நிறுவனம்

40 கி.மீ. வேகத்தில் உடைந்த அலாய் வீல்கள்: வாரண்டியில் சரி செய்ய மறுத்த பிரபல நிறுவனம்

பஜாஜ் நிறுவனத்தின் டாமினர் 400 கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் ரூ.1.36 லட்சத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட டாமினர் 400 தற்போதைய ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளை சேர்த்தால் மொத்தம் விலை ரூ.1.41 லட்சம் ஆகும். 
 
அதிகப்படியான பிரச்சனைகள் ஏற்படுவதைத் தொடர்ந்து பஜாஜ் டாமினர், மே 2017 வரை 1,500 யுனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகளவு பிரச்சனைகளே விற்பனை மந்தமாக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
 
அந்த வகையில் பஜாஜ் டாமினர் 400 வாங்கிய வாடிக்கையாளர் 40 கி.மீ. வேகத்தில் சிறிய பள்ளத்தில் இறக்கியதும் டாமினரின் பின்புற மோனோஷாக் உடைந்து, அலாய் வீல்களை வளைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். வாகனத்திற்கு வாரண்டி இருப்பதால் எவ்வித கட்டணமும் இன்றி பாகங்களை மாற்றிக் கொள்ள முடியும் என நினைத்துள்ளார். 
 
\"\"
 
உடனே பஜாஜ் சர்வீஸ் சென்டர் விரைந்த மகாராஷ்டிரா வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பஜாஜ் சார்பில் டாமினர் அலாய் மற்றும் சேதமடைந்த பாகங்களை சரி செய்ய மொத்தம் ரூ.13,000 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வீஸ் சென்டரிலேயே வாகனத்தின் வீல்கள் அதிகளவு வளைந்துள்ளது என வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார். எனினும் இதையும் பஜாஜ் அதிகாரிகள் மறுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
சமீபத்திய பஜாஜ் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பாகங்கள் உடனடியாக சேதமடைவதாக பெரும்பாலான பஜாஜ் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கே.டி.எம். அலாய் வீல்களும், 390 டியூக் மற்றும் ஆர்.எஸ். 200 உள்ளிட்டவற்றில் அதிக பாதிப்புகள் வெகு சீக்கிரமே ஏற்படுகிறது என புகார் தெரிவிக்கின்றனர்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.