Oppo RealMe 2: அசத்தாலான ஆஃபர்களுடன் இன்று பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது ரியல்மீ2!!

Oppo RealMe 2: அசத்தாலான ஆஃபர்களுடன் இன்று பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது ரியல்மீ2!!

அசத்தாலான ஆஃபர்களுடன் இன்று பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது ரியல்மீ2!!

ஓப்போ நிறுவனத்தின் புதிய ரியல்மீ 2 மொபைலின் விற்பனை, இன்று மதியம் 12 மணியளவில் பிளிப்கார்ட்டில் தொடங்குகிறது. 

ரியல்மீ 2 மொபைலின் அம்சங்கள்:

வெளியீடு: 
ஓப்போ நிறுவனம், ரியல்மீ என்ற பெயரில் மற்றொரு மொபைல் பிராண்டைத் தொடங்கியது. அதன் முதல் மொபைலான ரியல்மீ 1 கடந்த மே மாதம் வெளியாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, அதன் அடுத்த மாடலான ரியல்மீ 2 மொபைலானது ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மதியம் 12 மணியளவில் ரியல்மீ 2 பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. 

ஸ்கீர்ன்:
ஸ்க்ரீன் அளவைப் பொறுத்தவரையில், ரியல்மீ 2 6.2 இன்ச் நீளம் கொண்டது. இதனால், மொபைல் பார்க்க மிகவும் பெரியதாக இருக்கும். டிஸ்ப்ளே நாட்ச் ஸ்க்ரீன் இருப்பதால், படங்கள், வீடியோக்கள் பார்க்க நன்றாக இருக்கும். 

ஆண்ட்ராய்டு வெர்சன்: 
ரியல்மீ 2 மொபைல் ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) இயங்குதளத்தில் செயல்படுகிறது. அதுதவிர, ஓப்போ நிறுவனத்தின் பிரத்யேக ColorOS 5.1 உம் இந்த மொபைலில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. மேலும், ரியல்மீ 2 இல் Qualcomm SDM450 Snapdragon 450 சிப்செட் பயன்படுத்தபட்டுள்ளது. 

மெமரி: 
ரியல்மீ 2 மொபைலில், நீங்கள் எக்ஸ்டர்னல் மெமரியை 256 ஜிபி வரை நீட்டித்துக்கொள்ள முடியும். 

ரேம்: 
ரியல்மீ 2 மொபைல் இரண்டு ரேம் வகைகளில் மட்டுமே வருகிறது. 4gb ரேம் 64 gb இன்டர்னல் மெமரி, 3gb ரேம் 32 gb. இதனால், அதிக கிராபிக்ஸ் கொண்ட கேம்களை விளையாடும்போதோ அல்லது பல அப்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதிலோ சிக்கல் உண்டாகலாம். 

கேமரா: 
ரியல்மீ 2 இல் 13 மெகா பிக்சல் பின்பக்க கேமராவோடு, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சாரும் உள்ளது. முன்பக்க செல்பி கேமராவைப் பொறுத்தவரையில், அதிக தெளிவுத்திறன் (High Resolution)கொண்ட 8 மெகா பிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 

பேட்டரி: 
ரியல்மீ 2 இல் Li-Ion 4230 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், ரியல்மீ 2 மற்ற ஆண்ட்ராய்டு மொபைல்களைக் காட்டிலும் அதிக நேரம் நீடித்து உழைக்கும். இதில், பேட்டரி இன்-பில்ட்டாகவே உள்ளதால், உங்களால் பேட்டரியை கழட்ட முடியாது. 

வண்ணம்: 
ரியல்மீ 2 மொபைல் Diamond Black, Diamond Red, Diamond Blue என்ற மூன்று மாறுபட்ட வண்ணங்களில் கிடைக்கின்றது. 

விலை: 
ரியல்மீ 2, 3gb ரேம் 32 gp இன்டர்னல் மெமரி ரூ.8,990க்கும் , 4gb ரேம் 64 gp இன்டர்னல் மெமரி ரூ.10,990க்கும் விற்கப்படுகிறது. 

ஆஃபர்: 
எச்டிஎஃசி டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, பிளிப்கார்ட்டில் இந்த மொபைலை வாங்கும்போது, ரூ.750 தள்ளுபடி கிடைக்கும். 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.