புதிதாக வேலைத் தேடுபவர்களுக்காக KORMO - கூகுளின் இந்த ஆப் பற்றித் தெரியுமா?

வேலை தேடல் என்பது இன்றைய காலகட்டத்தில் அசாத்தியமான ஒன்றாக உள்ளது.

புதிதாக வேலைத் தேடுபவர்களுக்காக KORMO - கூகுளின் இந்த ஆப் பற்றித் தெரியுமா?

வேலை தேடல் என்பது இன்றைய காலகட்டத்தில் அசாத்தியமான ஒன்றாக உள்ளது. அதுவும் இந்தியா போன்ற மிக பெரிய மக்கள் தொகை உடைய நாட்டில் வேலைக்கான தேடுதல் வேட்டை என்பது மிகப்பெரிய சவால் இதனை கருத்தில் கொண்டு தொடக்க நிலை வேலை தேடுபவர்களுக்கு GOOGLE நிறுவனம் "KORMO" எனும் புதிய பயன்பாட்டு மென்பொருளை ( Application ) இந்தியாவில் வெளியிட்டுள்ளது .

தொழில்நுட்பத்துறை யின் ராட்சசனா Google நிறுவனம் இந்தியாவில் கடந்த வாரம் KORMO எனும் வேலைவாய்ப்புக்கான பயன்பாட்டு மென்பொருளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் முக்கிய நகரங்களில் உள்ள தொடக்க நிலை வேலைகளை இந்த ஆஃப் ல் பதிவு செய்தவர்கள் மிக சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த வேலைவாய்ப்புக்கான KORMO ஆஃப் பை 2018 ல் Google நிறுவனம் பங்களாதேஷ் ல் வெளியிட்டது . பின்னர் இந்த ஆஃப் பயன்பாட்டை இந்தோனேசியா க்கும் நீட்டித்தது.

கொரோனா எனும் நோயின் தாக்கத்திற்கு பிறகான காலகட்டத்தில் பல வேலை தேடும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த KORMO jobs எனும் ஆன்ட்ராய்டு இயங்கு தள ஆஃப் பை வெளியிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வாக தெரிவித்துள்ளது .

ஆனால் கடந்த ஆண்டு இந்த KORMO ஆஃப் ஆனது கட்டண முறையில் Google ன் பயன்பாட்டுத் தளமான Google pay ல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click here to join
Telegram Channel for FREE