Honda Activa 7G: என்னது, 100 கிமீ மைலேஜா? ஹைபிரிட் இன்ஜினுடன் வருது புது ஆக்டிவா ஸ்கூட்டர்!

1 year ago 202

‘4G–யைவிட வேகமாக இருக்கும்’ என்று 2018–ல் 5G–யைக் கொண்டு வந்தார்கள். அதுவும் போதவில்லை என்று இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2020–ல் 6G வந்தது. இப்போது கணக்குப்படிப் பார்த்தால், இந்த ஆண்டே 7G வந்திருக்க வேண்டும். இதற்கு சிப் ஷார்ட்டேஜ்தான் காரணம் என்கிறார்கள். அதனால், இதை அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைத்திருக்கிறது அந்த நிறுவனம். 

இது சிம் கார்டோ நெட்வொர்க்கோ இல்லை; ஹோண்டாவின் ஆக்டிவா ஸ்கூட்டர் பற்றிய அப்டேட் இது! ஆம், ஹோண்டா டூவீலர்ஸ், தனது புது ஆக்டிவா வேரியன்ட்டின் டீஸரை வெளியிட்டு, ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களைப் பரபரப்பாக்கி விட்டிருக்கிறது. ஹோண்டா ஆக்டிவாவின் 7G வேரியன்ட்டில் ஏகப்பட்ட புதுமையான விஷயங்களைக் களமிறக்கி இருக்கிறது ஹோண்டா. அது என்னன்னு பார்க்கலாம்!
Activa 7G

Activa 7G

  • ஆக்டிவாவில் எத்தனை G–க்கள் வந்தாலும், அவுட்லுக்கில் பெரிதாக மாற்றங்கள் இருக்காது. இந்த 7G–ல் கொஞ்சூண்டு மட்டும் ஷார்ப் டிசைனைக் கொண்டு வடிவமைக்கப் போகிறதாம் ஹோண்டா. 6G–ல் இருப்பதைப்போல், இதிலும் பெட்ரோல் நிரப்பும் வசதி வெளியிலேயே இருக்கும். ஆனால், தூரத்தில் பார்த்தால் ‘ஆக்டிவா வருது’ என்று கண்டுபிடித்து விடலாம். 

  • இந்த ஆக்டிவா 7G, விற்பனையில் இருக்கும் வேரியன்ட்களைவிட, எக்ஸ் ஷோரூம் விலை சுமார் 6,000 முதல் 10,000 வரை அதிகமாக இருக்கலாம்.

  • இதன் முக்கிய மாற்றமாக, இதிலுள்ள இன்ஜினை மாற்ற இருக்கிறது ஹோண்டா. அதே 109.5 சிசி இன்ஜின்தான்; அதே 7.79bhp பவர் மற்றும் 8.79Nm டார்க்தான் இருக்கும். ஆனால், இது ஹைபிரிட் இன்ஜினாக இருக்கும். ஹைபிரிட் என்றால், ஒரே நேரத்தில் பேட்டரி மற்றும் பெட்ரோல் இரண்டிலுமே மாற்றி மாற்றி ஓட்டிக் கொள்ளலாம். இது கார்களில் இருக்கும் அம்சம். வெரிகுட் ஹோண்டா!

  • ஹைபிரிட் என்பதால், முக்கியமாக இதன் மைலேஜ் நிச்சயம் தாறுமாறாக இருக்கும். இதன் அராய் மைலேஜ்படி இது சுமார் 100 கிமீ தரலாம் என்று செய்திகள் அடிபடுகின்றன. அப்படியென்றால், ரியல் டைம் மைலேஜாக சுமார் 80 கிமீ கிடைத்தாலே… தாறுமாறுதானே!

  • இதில் ஸ்ட்ராங் ஹைபிரிட் சிஸ்டம் வருகிறதா… அல்லது மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் கொண்டு வரப் போகிறதா ஹோண்டா என்பது இன்னும் தெரியவில்லை. 

  • ஹைபிரிட்டைத் தாண்டி, இதில் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் சிஸ்டம் அதாவது – ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டத்துடனும் வரவிருக்கிறது ஆக்டிவா 7G. சிக்னல்களில் சில குறிப்பிட்ட விநாடிகளுக்கு மேல் நின்றால், தானாக ஆஃப் ஆகும். மறுபடியும் ஆக்ஸிலரேட்டர் முறுக்கினால் மீண்டும் ஸ்டார்ட் ஆகிக் கிளம்பும். இதனால், மைலேஜ் எக்ஸ்ட்ராவாகக் கிடைக்கும்.

Honda Activa 6G

Honda Activa 6G

  • இப்போது விற்பனையில் இருக்கும் ஆக்டிவா 6G–ல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்தான் இருக்கிறது. இது அவுட்டேட்டட் ஆகிவிட்டது என்கிற குறை இருந்து வருகிறது. புது 7G–யில் முழுக்க டிஜிட்டல் கன்சோலுடன் வரவிருக்கிறது. இதில் ஓடோ மீட்டர், பெட்ரோல் இண்டிகேட்டர் போன்ற விஷயங்கள் தெரியும். 

  • இப்போது ஸ்கூட்டர் புளூடூத் கனெக்டிவிட்டி இல்லையென்றால், வாடிக்கையாளர்களின் சாபத்துக்கு ஆளாக நேரிடும். இதை இப்போதுதான் புரிந்து கொண்டிருக்கிறது ஹோண்டா. 7G–ல் புளூடூத் கனெக்டிவிட்டி தொழில்நுட்பத்துடன் வருகிறது. 

  • இதன் ஹேண்டில்பாரில் ஹைபிரிட்டை ஆன்/ஆஃப் செய்ய ஹைபிரிட் ஸ்விட்ச்சும் உண்டு. இதை ஆஃப் செய்தால், பெட்ரோலில் மட்டும் ஸ்கூட்டர் ஓடும். 

  • கையாளுமையைப் பொருத்தவரை அதிலும் முன்னேற்றம் தெரியும் இந்த 7G–ல். இதில் வழக்கத்தைவிட 1 இன்ச் அளவு பெரிய டயர்களைப் பொருத்த இருக்கிறது ஹோண்டா. 

வரும் 2023, ஜூலை–ஆகஸ்ட் மாதத்துக்குள் இந்த ஹோண்டா ஆக்டிவா 7G ஸ்கூட்டர் லாஞ்ச் ஆகலாம். இப்போது வரை ஸ்கூட்டர் விற்பனையில் நம்பர் ஒன்னில் இருப்பது ஆக்டிவாதான். இந்த ஆக்டிவா 7G–யும் செம விற்பனையில் ஆக்டிவ்வாகத்தான் இருக்கும். இருந்தாலும், ஹோண்டாவுக்கு ஒரு வேண்டுகோள்: டிசைனில் கொஞ்சம் மாற்றம் செய்யுங்கள் ஹோண்டா ப்ளீஸ்!