Kolkatta Tour : கொல்கத்தாவுக்கு சின்ன பட்ஜெட்லயே சூப்பர் டூர் ப்ளான் போடலாம்.. எப்படி தெரியுமா மக்களே?

1 year ago 205
  • முகப்பு
  • லைப்ஸ்டைல்
  • Kolkatta Tour : கொல்கத்தாவுக்கு சின்ன பட்ஜெட்லயே சூப்பர் டூர் ப்ளான் போடலாம்.. எப்படி தெரியுமா மக்களே?

வனவிலங்குகளை நீங்கள் மிக அருகே பார்க்க விரும்பினால், நீங்கள் சுந்தர்பன்  பகுதிக்குச் செல்ல வேண்டும். இங்கே நீங்கள் பசுமை மற்றும் அமைதியான சூழ்நிலையில் இளைப்பாறலாம்.

Planning a Trip To Kolkata? You Must Visit These Places Away From The City Life Kolkatta Tour : கொல்கத்தாவுக்கு சின்ன பட்ஜெட்லயே சூப்பர் டூர் ப்ளான் போடலாம்.. எப்படி தெரியுமா மக்களே?

கொல்கத்தா

கொல்கத்தா நகரம் அதன் வண்ணங்களுக்கும் கொண்டாட்டக்களுக்குமாக சிட்டி ஆஃப் ஜாய் என அழைக்கப்படுகிறது.நகர வாழ்க்கையின் சலசலப்பிலிருந்து விலகி ஏதாவது ஒன்றைத் திட்டமிடுகிறீர்கள் என்றால் கொல்கத்தா அருகே சுற்றிப்பார்க்கப் பல இடங்கள் உள்ளன. எனவே, கொல்கத்தாவில் இருந்து சில மணிநேரங்கள் தொலைவில் உள்ள சில அற்புதமான இடங்களை நீங்கள் வார இறுதியில் சென்று சுற்றிப் பார்க்க உங்களுக்காகப் பட்டியலிடுகிறோம்...

1. கலிம்போங்: கலிம்போங் மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு விசித்திரமான மலைவாசஸ்தலமாகும், இது அதன் அழகிய பள்ளத்தாக்குகள், புத்த மடங்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் போன்றவற்றுக்கு பெயர் பெற்றது. கொல்கத்தாவில் இருந்து சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் இந்த மலைவாசஸ்தலம் உள்ளது.

2. தாஜ்பூர்: தாஜ்பூர் அதன் அழகிய கடற்கரைக்கு பிரபலமானது. கொல்கத்தாவில் இருந்து தாஜ்பூருக்கு உள்ள தூரம் வெறும் 172 கி.மீ. இந்த இடம் மந்தர்மணி மற்றும் சங்கர்பூர் இடையே அமைந்துள்ளது, இவை மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களாகும்.

3. சாந்திநிகேதன்: சாந்திநிகேதன் மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம். கொல்கத்தாவில் இருந்து 161 கிமீ தொலைவில் உள்ளது. ரவீந்திரநாத் தாகூரின் வீடு மற்றும் விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் ஆகியவை இந்த நகரத்தின் முக்கிய பார்வை இடங்களாகும். இந்த இடம் அதன் இனிமையான வானிலை மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு பிரபலமானது.

News Reels

4. சுந்தரபன் காடு: வனவிலங்குகளை நீங்கள் மிக அருகே பார்க்க விரும்பினால், நீங்கள் சுந்தர்பன்  பகுதிக்குச் செல்ல வேண்டும். இங்கே நீங்கள் பசுமை மற்றும் அமைதியான சூழ்நிலையில் இளைப்பாறலாம். சுந்தபன் காடு அதன் மிகப்பெரிய புலிகள் காப்பகத்திற்கும் தேசிய பூங்காவிற்கும் பிரபலமானது. இது உலகின் மிகப்பெரிய டெல்டா சதுப்புநிலக் காடுகளைக் கொண்டுள்ளது மற்றும் ராயல் பெங்கால் டைகர் போன்ற பல  வனவிலங்குகளின் தாயகமாகவும் உள்ளது.

5. பிஷ்ணுபூர்: பிஷ்ணுபூர் கொல்கத்தாவில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மல்லா ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட டெரகோட்டா கோயில்கள், 1600-1800 CE காலத்தில் கட்டப்பட்ட ராதா கிருஷ்ணா கோயில்கள், கட்டிடக்கலை, பலுச்சாரி புடவைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் போன்றவற்றுக்கு இந்த இடம் பெயர் பெற்றது.

ரயில்களை பயன்படுத்தி பயணிக்கவேண்டும் என்பது அடிப்படை விதி. இது பட்ஜெட் டிப். மேற்சொன்ன இந்த இடங்களுக்கு செல்ல, பெரிதான கட்டணங்கள் ஏதுமில்லை. ஆர்வமும், உற்சாகமும் போதும்.

Published at : 05 Dec 2022 12:31 PM (IST) Tags: kolkatta Tagore Travel Shantiniketan Tourism