அதிவேக போன் சார்ஜிங்கிற்கு உதவும் Mi 30W Wireless Charger… விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

 அதிவேக போன் சார்ஜிங்கிற்கு உதவும் Mi 30W Wireless Charger… விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

ஷாவ்மி நிறுவனத்தின் எம்ஐ 30W வயர்லெஸ் சார்ஜர் தற்போது ஓபன் சேலுக்கு வந்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம். 

ஷாவ்மி நிறுவனம் கடந்த மே மாதம் புத்தம் புதிய 30W வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜரை அறிமுகம் செய்தது. இது ஏப்ரல் மாதம் அறிமுகமான ஒன்பிளஸ் வார்ப் சார்ஜருக்குப் போட்டியாக வந்துள்ளது.

எம்ஐ வயர்லெஸ் சார்ஜர் மூலம் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மட்டுமில்லாது, மற்ற சாம்சங், ஆப்பிள் போன்ற ஸ்மார்ட்போன்களையும் சார்ஜ் செய்ய முடியும். ஆனால், அந்த ஸ்மார்ட்போன்களில் வயர்லெஜ் சார்ஜ் ஏறும் வசதி இருக்க வேண்டும். 

மே மாதம் எம்ஐ 30W வயர்லெஸ் சார்ஜர் அறிமுகமாகும் போது சிறப்பு விலையாக 1,999 ரூபாய் இருந்தது. தற்போது ஏற்கனவே கூறியபடி, 2,299 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே ஒன்பிளஸ் வார்ப் சார்ஜரின் விலை 3,990 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. 

Mi 30W வயர்லெஸ் சார்ஜரின் சிறப்பம்சங்கள்:
பெயருக்கு ஏற்றவாறு இந்த சார்ஜர் 30 வாட் மின்சக்தியை வழங்குகிறது. இதன் மீது ஸ்மார்ட்போன்களை எளிதாக வைப்பதற்கும், எடுப்பதற்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள் வழுக்காதாவாறு நல்ல கிரிப்புடன் மேற்பரப்பு உள்ளது. 

மின்அதிர்வைத் தடுக்கும் வகையில் இதில் ஐந்த அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்மார்ட்போன்கள் தவிர மற்ற உலோகப் பொருட்கள் அருகில் இருந்தால் நமக்கு காட்டிக் கொடுக்கிறது. அதாவது கீ செயின், நாணயங்கள் போன்றவை இந்த வயர்லெஸ் சார்ஜர் அருகில் கிடந்தால் உடனே நமக்கு அறிவித்து விடுகிறது. 

முக்கிய சிறப்பம்சமாக எம்ஐ வயர்லெஸ் சார்ஜரில் இன்பில்டு கூலிங் ஃபேன் உள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போன் சூடாவதிலிருந்து தடுக்கப்படுகிறது. இந்த கேட்ஜெட்டுக்கு சர்வதேச தர நிர்ணயமான Qi தரம் வழங்கப்பட்டுள்ளது. ஓவர் வோல்டேஜ் ப்ரோடெக்ஷன், ஓவர் கரண்ட் ப்ரோட்டெக்ஷன், ஓவர் டெம்பரேட்சர் ப்ரோடெக்ஷன், அண்டர் வோல்டேஜ் ப்ரொடெக்ஷன் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளன.

0 Reviews

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *