Car Designing 3D Workshop: `டியர் ஸ்டூடன்ட்ஸ்'; உங்களில் யார் அடுத்த கார் டிசைனர்? அதுவும் 3D–ல்!

1 year ago 184
மோட்டார் விகடன் நடத்தும் ஒர்க்ஷாப் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன முன்னுரை: மோட்டார் விகடனும், அசோக் லேலாண்டின் தலைமை வடிவமைப்பாளர் சத்தியசீலனின் ஆயா அகாடமியும் இணைந்து  2 மாதங்களுக்கு ஒரு முறை ‘கார் டிசைன் ஒர்க்ஷாப்’ எனும் ஒரு பயிலரங்கம் நடத்துகிறது.

இந்தப் பயிலரங்கத்தில் கார்களைப் பற்றிய (கார்களைப் பற்றி மட்டுமல்ல; பல ஓவியங்களையும் அழி ரப்பர் பயன்படுத்தாமலேயே பென்சிலில் வரையக் கற்றுக்கொள்ளலாம் என்பதும் ஸ்பெஷல்!) A to Z விஷயங்களையும் கற்றுக் கொள்ளலாம். அதை பேப்பரில் வரைந்து உருவாக்குவதிலிருந்து, ரியலாக அதே வடிவத்தைக் களிமண் மூலம் க்ளே மாடலிங் செய்து உருவாக்குவது வரை இந்த ஒர்க்ஷாப்பில் எல்லாமே பயிற்றுவிக்கப்படும். இதில் கலந்து கொண்ட சில மாணவர்கள் சிலர், வெளிநாடுகளில் சில கார் நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது கொசுறுச் செய்தி. 

அதே பயிலரங்கம் இந்த மாதமும் 10–11–ம் தேதிகளில் நடக்க இருக்கிறது. இந்த முறை வித்தியாசமாக! நீங்கள் க்ளே மாடலிங் செய்த கார்களை 3D மாடலிங்காகக் கணினியில் எப்படிச் செய்வது; அதாவது கிராஃபிக் டிசைனிங் மூலம் கார்களை எப்படி உண்மையான வடிவத்தைப்போல் உருவாக்குவது என்பதை இந்தப் பயிலரங்கத்தில் கற்றுத் தர இருக்கிறார், அசோக் லேலாண்டின் தலைமை வடிவமைப்பாளர் சத்தியசீலன். நாம் சாலையில் பார்க்கும் பல கார்கள், ஆட்டோக்கள், ட்ரக்குகள், அசோக் லேலாண்டின் பல பஸ்கள், விமான நிலையப் பேருந்துகள் வரை இவரது கை வண்ணத்தில் உருவானவையே!

சத்தியசீலன்

சத்தியசீலன்

இந்த ஒர்க்ஷாப்பில் Blender எனும் சாஃப்ட்வேர்தான் பயன்படுத்தப்பட இருக்கிறது. உங்களுக்கு மாயா, 3D போன்ற சாஃப்ட்வேர்கள் தெரிந்திருந்தால், இந்த Blender பெயரைக் கேட்டதும் நிமிர்ந்து உட்கார்வார்கள். காரணம், மற்ற மென்பொருள்கள்போல் இது கட்டணம் கட்டி டவுன்லோடு செய்யத் தேவையில்லை என்பது நடுத்தர டிசைனர்களுக்கு வரப்பிரசாதம்! உங்கள் கணினியில் இது இருந்தால், யாருமே கிராஃபிக் டிசைனராகலாம். அந்த வித்தையைத்தான் கற்றுத் தரவிருக்கிறார் சத்தியசீலன். 

Blender 3D Software

Blender 3D Software

இதில் வழக்கமான கேரக்டர்களைத் தாண்டி – பொருட்களைத் தாண்டி– கார், அவற்றின் கலை உருவங்கள், உதிரி பாகங்கள் என்று பல விஷயங்களை `3D மாடலிங் செய்வது எப்படி?' என்பதை மவுஸ்நுனியில் நமக்குக் கற்றுத் தரப் போகின்றன. மோட்டார் விகடனும், ஆயா அகாடமியும். இந்த சாஃப்ட்வேர் பயன்படுத்தித்தான் ரெனோ போன்ற நிறுவனங்கள், தங்கள் கார்களை 3D  மாடலிங் செய்கின்றன. இந்த 3D Blender சாஃப்ட்வேர் கற்றுத் தெரிந்தால்… ரெனோ போன்ற கார் நிறுவனங்களில்கூட வேலை வாய்ப்புப் பெறலாம் என்பதற்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகச் சொல்கிறார் சத்தியசீலன். 

இது கிராஃபிக் டிசைன் பயில விரும்பும் மாணவர்களுக்கு, போட்டோஷாப் – கோரல்டிரா போன்ற மென்பொருள்களில் இருந்து அடுத்த நிலைக்குத் தாவ விரும்பும் கிராஃபிக் டிசைனர்களுக்கு – கார் டிசைனிங்கில் பணிக்குச் சேர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்தக் கட்டணப் பயிலரங்கம் நிச்சயம் ஒரு நல்ல ஓப்பனிங்காக இருக்கலாம். 

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது – உங்கள் லேப்டாப்பில் பிளெண்டர் சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்துவிட்டு, வரும் டிசம்பர் 2002, 10–11–ம் தேதிகளில் ஆனந்த விகடன் 757, அண்ணா சாலை அலுவலகத்துக்கு வருவதுதான். அதற்கு முதலில் கீழே இருக்கும் லிங்க்கில் கட்டணம் கட்டி உங்கள் பெயரைப் பதிவு செய்து விடுங்கள். ‘உங்களில் யார் அடுத்த கார் டிசைனர்?’ என்பது தெரிய வரும்.

Car Designing 3D Workshop: டியர் ஸ்டூடன்ட்ஸ்... பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்! - Car Designing 3D Workshop