உங்க EB bill எவ்வளவு வரும்? 5 seconds-ல பாருங்க
இரண்டு மாத unit-ஐ போடுங்க: 2026 domestic slab rate படி உங்க EB bill எவ்வளவுன்னு உடனே காட்டுது. 500 unit-ஐ தாண்டினா bill ஏன் திடீர்னு ஏறுதுன்னும் சொல்லுது.
இரண்டு மாச unit-ஐ போடுங்க
Bill-ல "Units consumed" அல்லது current reading − previous reading.
உத்தேச bill:
- : =
2026 TNEB வீட்டு மின் கட்டண slab (இரண்டு மாசத்துக்கு)
500 unit அல்லது குறைவா
| Unit | ஒரு unit-க்கு |
|---|---|
| 1 – 200 | இலவசம் |
| 201 – 400 | ₹4.70 |
| 401 – 500 | ₹6.30 |
500 unit-க்கு மேல
| Unit | ஒரு unit-க்கு |
|---|---|
| 1 – 100 | இலவசம் |
| 101 – 400 | ₹4.70 |
| 401 – 500 | ₹6.30 |
| 501 – 600 | ₹8.40 |
| 601 – 800 | ₹9.45 |
| 801 – 1000 | ₹10.50 |
| 1001 – மேல் | ₹11.55 |
Fixed charge, minimum charge இல்லை. Rate-கள் 2026 அக்டோபர் TNPDCL domestic (LT I-A) bill-ல print ஆன slab table-ல இருந்து எடுத்தது. Rate மாறினா உங்க bill-ல இருக்குறது தான் இறுதி.
எத்தனை unit-க்கு எவ்வளவு bill?
| இரண்டு மாச unit | Bill |
|---|---|
| 100 | ₹0 |
| 200 | ₹0 |
| 300 | ₹470 |
| 400 | ₹940 |
| 500 | ₹1,570 |
| 501 | ₹2,048.40 |
| 600 | ₹2,880 |
| 800 | ₹4,770 |
| 1000 | ₹6,870 |
EB தொடர்பான guide-கள்
⚠️ "இன்று இரவு EB connection cut" SMS வந்துச்சா?
அது scam. EB இப்படி personal number-ல இருந்து SMS அனுப்பாது. Scam checker-ல message-ஐ சரிபாருங்க.
FAQ
TNEB bill எத்தனை மாசத்துக்கு ஒரு முறை வருது?
வீட்டு (domestic) connection-க்கு இரண்டு மாசத்துக்கு ஒரு முறை reading எடுக்குறாங்க. அதனால இந்த calculator-ல இரண்டு மாச unit-ஐ தான் போடணும்.
எத்தனை unit வரை இலவசம்?
இரண்டு மாசத்துல 500 unit அல்லது அதுக்கு குறைவா use பண்ணா முதல் 200 unit இலவசம். 500-ஐ தாண்டினா முதல் 100 unit மட்டும் தான் இலவசம்.
500 unit-ஐ தாண்டினா bill ஏன் இவ்வளவு ஏறுது?
501 unit ஆனதும் இன்னொரு slab table-க்கு மாறுது: இலவச unit 200-ல இருந்து 100 ஆகுது, 501-க்கு மேல ₹8.40 முதல் rate ஏறுது. அதனால 500 unit-க்கு ₹1,570, 501 unit-க்கு ₹2,048.40.
இந்த கணக்கு bill-ஓட சரியா ஒத்துப்போகுமா?
இது energy charge-ஓட கணக்கு. Rate revision, deposit, arrears இருந்தா bill-ல வேற தொகை வரலாம். உங்க bill-ல இருக்குற slab table-ஐ பாத்து உறுதிப்படுத்துங்க.


