🛡️ TamilTech · இலவச tool

இந்த message scam-ஆ? 10 seconds-ல சரிபாருங்க

வந்த SMS, WhatsApp, email-ஐ paste பண்ணுங்க: OTP, KYC, மின் இணைப்பு துண்டிப்பு, courier, digital arrest போன்ற scam அறிகுறிகளை உடனே காட்டும். உங்க message எங்கும் அனுப்பப்படாது.

Message-ஐ இங்கே paste பண்ணுங்க

🔒 உங்க message இந்த phone-ஐ விட்டு போகாது.

தமிழ்நாட்டில் இப்போ அதிகம் நடக்கும் scam-கள்

மின் இணைப்பு துண்டிப்பு

"இன்று இரவு 9 மணிக்கு உங்க EB connection cut ஆகும், இந்த number-க்கு call பண்ணுங்க" — EB இப்படி SMS அனுப்பாது.

KYC / ஆதார் update

Bank account block ஆகும்னு பயமுறுத்தி link அனுப்பி OTP வாங்குவாங்க.

Courier / parcel

உங்க பெயரில் parcel-ல போதைப்பொருள் இருக்குன்னு சொல்லி "fee" கேட்பாங்க.

Digital arrest

Police/CBI மாதிரி video call பண்ணி "arrest" பயமுறுத்தல். உண்மையான police video call-ல arrest பண்ணாது.

பரிசு / refund / cashback

"நீங்க ஜெயிச்சீங்க", "refund வரணும்" — பணம் வாங்க UPI PIN போடச் சொல்வாங்க. பணம் வாங்க PIN தேவையே இல்லை.

Part-time job

YouTube like, review பண்ணா பணம் — முதலில் சின்ன பணம் கொடுத்து பிறகு பெரிய "deposit" கேட்பாங்க.

பணம் போயிருச்சா? உடனே இதை பண்ணுங்க

  1. 1930-க்கு call பண்ணுங்க (national cyber crime helpline).
  2. cybercrime.gov.in-ல் புகார் பதிவு பண்ணுங்க.
  3. உங்க bank-க்கு call பண்ணி card / UPI / net banking-ஐ block பண்ணுங்க.
  4. Screenshot, number, transaction ID எல்லாம் save பண்ணுங்க.
AI-ஆல முழுசா சரிபார்க்கணுமா? TamilTech app-ல Tech Mentor → "இது scam-ஆ?" — message-ஐ படிச்சு தமிழில் விளக்கும். →

சமீபத்திய scam alerts

FAQ

இந்த checker message-ஐ எங்காவது அனுப்புமா?

இல்லை. சோதனை முழுக்க உங்க browser-லயே நடக்கும். Message எங்க server-க்கு வராது, எங்கும் save ஆகாது.

"Red flag இல்லை" என்றால் message பாதுகாப்பானதா?

அவசியமில்லை. இது பொதுவான scam அறிகுறிகளை மட்டும் பார்க்கும். Bank அல்லது நிறுவனத்தின் official number-க்கு நீங்களே call பண்ணி உறுதிசெய்யுங்க. OTP-ஐ யாருக்கும் சொல்லாதீங்க.

ஏற்கனவே பணம் போயிருச்சுன்னா என்ன பண்றது?

உடனே 1930 (cyber crime helpline)-க்கு call பண்ணுங்க, cybercrime.gov.in-ல் புகார் கொடுங்க, உங்க bank-ஐ தொடர்புகொண்டு card/UPI-ஐ block பண்ணுங்க. முதல் 1–2 மணி நேரம் ரொம்ப முக்கியம்.

Bank KYC update link-ஐ SMS-ல அனுப்புமா?

இல்லை. Bank-கள் SMS/WhatsApp link மூலம் KYC கேட்காது, OTP அல்லது PIN கேட்காது. அப்படி வந்தால் அது scam.

Tamiltech

Tamiltech

Install app for faster access

Earn XP 🏆
WhatsApp
Notifications